திருப்பூர் தாழ்த்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் கடந்த மாதம் ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு பொதுமக்கள் வசிக்கும் இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தனர்.
திருப்பூர் தாழ்த்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
x
திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் கடந்த மாதம் ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு பொதுமக்கள் வசிக்கும் இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் கொண்டு வரவும் , மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரவும் 2 கி.மீ வரை சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது . இந்நிலையில் அலகுமலை கிராமத்திற்கு  வந்திருந்த தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத் துணைத்தலைவர் முருகன் சர்ச்சைக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்தார். மேலும் இரு தரப்பு பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்