காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் : கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பொதுமக்கள் காப்பாற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, கோசுக்குறிச்சி பாலாற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில் சிக்கிய அமானுல்லா  என்ற இளைஞரை, அந்த பகுதி மக்களும் அவரது நண்பர்களும் கயிறு கட்டி மீட்டனர். பாலத்தில் இருந்து கயிறு வீசி மீட்ட அந்த காட்சிகள், சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்