கஜா புயல் எதிரொலி : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் எதிரொலி : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
x
கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் திருமணி முத்தாறு காட்டாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால் ஏராளமான இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். 

வெள்ளத்தில் சிக்கிய ஆடு மேய்ப்பவர் போராடி மீட்பு



திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெய்த கனமழையால் வரதமாநதி அணை நிரம்பி, சண்முகநதி ஆற்றில்  4000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. சண்முகநதி ஆற்றின் கரையில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மானூரை சேர்ந்த ஈஸ்வரன், 10க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு ஈஸ்வரனை மீட்டனர்.

ருத்ர தாண்டவம் ஆடியது, கஜா புயல்



கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி, நாகை , தஞ்சை , திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 27 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள், வீடுகள், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவை, சூறாவளி காற்றில் சரிந்து விழுந்தன. பல நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், சரி செய்யும் பணியில் ஊழியர்கள், முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அநேகமாக ஓரிரு நாட்களுக்குள், மின் விநியோகம் சீரடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


கஜா புயல் - வேரோடு சாய்ந்த மரங்கள், மின் கம்பங்கள் 



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுழன்று அடித்த புயல் காரணமாக முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. நகரில் உள்ள மின்கோபுரங்கள் சாய்ந்ததால் தொலை தொடர்பு வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட படகுகளில் தண்ணீர் புகுந்து சேதமானது. 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  சாலைகளில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கஜா புயல்- 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்



திருச்சி மாவட்டம் முசிறி அருகே கஜா புயலுக்கு, 10 ஆயிரம் வாழை மரங்கள்  சேதமடைந்தன. ஆமூர், மஞ்சக்கோரை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களில் சுமார் 10 ஆயிரம் மரங்கள் கஜா புயல் பாதிப்பால் முறிந்து விழுந்தது. இந்நிலையில் நேற்று மாலை வரை முறிந்த வாழை மரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் குறித்து, கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு  தகவல் தெரிவிக்கவில்லை என  கூறி, விஏஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்