"சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
x
* ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த  ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரயாணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் 60 சதவீதமாக அதிகரித்திருந்தாலும் பின்னால் இருப்பவர்கள் அணிவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 

* ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் 100 ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டு மீண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உத்தரவுகளை மட்டும் பிறப்பிப்பதால் எந்த பயனும் இல்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், சுய ஒழுக்கத்தோடு மக்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிக்க நினைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? போதுமான போக்குவரத்து காவலர்கள் இருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை  நவம்பர் 28 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்