பச்சை கிளிகளுக்காக வெடி இல்லா தீபாவளி கொண்டாட முடிவெடுத்த கிராமம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரத்தில் பச்சைகிளிகளுக்காக வெடி இல்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் தீர்மானித்துள்ளனர்.
பச்சை கிளிகளுக்காக வெடி இல்லா தீபாவளி கொண்டாட முடிவெடுத்த கிராமம்
x
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரத்தில் பச்சைகிளிகளுக்காக வெடி இல்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் தீர்மானித்துள்ளனர். உப்பிலி நகரில் சுமதி என்ற பெண் தினமும் வீட்டு வாசலில் கிளிகளுக்கு அரிசி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது காலை 6 மணி முதல் 7 மணி வரை தான் வெடி வெடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால், அதே நேரம் சாப்பிட வரும் கிளிகளுக்கு இடையூறு விளையும் என்பதால் இம்முறை வெடி இல்லா தீபாவளி கொண்டாட அந்த ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்