82 மாணவர்கள் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி

சென்னை எழும்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறு மற்றும் எட்டாம் வகுப்புகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்ற தகவல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
82 மாணவர்கள் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி
x
அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்த போதிலும், 6 முதல் 12 ம் வகுப்பு வரை வெறும் 82 மாணவர்களும், 15 ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில்,10 பேர் மட்டுமே மாணவிகள். 6 மற்றும் எட்டாம் வகுப்புகளில் ஒரு மாணவர் கூட கிடையாது என்ற தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 82 மாணவர்களில், பெரும்பாலான மாணவர்கள் வருவதில்லை என்றும், மாணவர்களை ஒழுங்குப்படுத்த உடற்கல்வி ஆசிரியர் இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மிக குறைந்த மாணவர்கள் படித்து வருவது கல்வியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்