"தகுதி நீக்கம் செல்லும்" - "ஆட்சிக்கு சிக்கல் இல்லை"

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பை தொடர்ந்து, ஆட்சிக்கு சிக்கல் இல்லை என தெரிய வந்துள்ளது.
தகுதி நீக்கம் செல்லும் - ஆட்சிக்கு சிக்கல் இல்லை
x
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பை தொடர்ந்து, ஆட்சிக்கு சிக்கல் இல்லை என தெரிய வந்துள்ளது. தீர்ப்புக்கு பிறகு, காலி இடங்கள் எண்ணிக்கை 20ஆகி விட்டதால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மைக்கு 108 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில்,  அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 116 பேரின் ஆதரவு உள்ளது. எனவே, ஆட்சிக்கு தற்போதை நிலையில் சிக்கல் இல்லை என கூறப்படுகிறது. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகிய மூவரும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றதால், அவர்களும் அதிமுக எம்எல்ஏ.க்களாகவே கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  எதிர்க்கட்சி வரிசையில் திமுகவுக்கு 88, காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் ஒன்று, சுயேச்சை எம்எல்ஏ தினகரன் என 98 உறுப்பினர்கள் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்