ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்
x
நீதிமன்ற உத்தரவின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியுள்ளது. ஏற்கனவே, தூத்துக்குடியில் உள்ள நான்கு காவல் நிலையங்கள், 2 துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்த, துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு ஆவணங்களை சிபிஐ போலீஸார்  சேகரித்தனர். இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சுற்றுலா மாளிகையில், சிபிஐ காவல் ஆய்வாளர் சரவணன், துணை காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் தலைமையில், இன்று விசாரணை நடைபெற்றது. இதில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்பட்ட அப்போதைய வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோரை வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதன் பின்னர், சிபிஐ குழுவினர், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்