அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட அரசு கேட்ட நிதியை தர மத்திய அரசு மறுப்பு

அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் கட்டுவதற்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியதால் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட அரசு கேட்ட நிதியை தர மத்திய அரசு மறுப்பு
x
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆயிரத்து 775 கழிவறைகள் கட்டுவதற்காகவும், பழுதுபார்க்கும் பணிகளுக்காகவும் மத்திய அரசிடம் 43 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. 'அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' இயக்குனர் சுடலைக் கண்ணன், இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார். 

மாணவிகளுக்கான கழிவறைகளுக்காக 22 புள்ளி 77 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான கழிவறைகளுக்காக 20 புள்ளி 73  கோடி ரூபாயும் கேட்கப்பட்ட நிலையில், முறையே 5 புள்ளி 47 கோடி மற்றும் 6 புள்ளி 82 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், 88 கழிவறைகளை கூட கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்