'சிபிஎஸ்இ தரம் எங்கே?' - நீதிபதி கிருபாகரன் கேள்வி

சிபிஎஸ்இ 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர் ரஜினி உள்ளிட்டவர்கள் பற்றி கேள்வி கேட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, அதற்கு சிபிஎஸ்இ தரம் எங்கே என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
சிபிஎஸ்இ தரம் எங்கே? - நீதிபதி கிருபாகரன் கேள்வி
x
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு புத்தக சுமையை குறைப்பது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்று வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

அப்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இரண்டாம் வகுப்பு பொது அறிவு பாடப் புத்தகத்தில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள்  பற்றி கேள்வி இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி கிருபாகரன், நாட்டின் முதன்மையான கல்வி வாரியமான சிபிஎஸ்இ யின் தரம் எங்கே என கேள்வி எழுப்பினார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் விதிகளை சிபிஎஸ்இ பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்