இளம்பெண் தற்கொலை விவகாரம் : நார்வே கணவருக்கு சென்னை போலீஸ் நோட்டீஸ்

சென்னையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் நார்வே நாட்டில் உள்ள கணவர் ஆஜராகவில்லை.
இளம்பெண் தற்கொலை விவகாரம் : நார்வே கணவருக்கு சென்னை போலீஸ் நோட்டீஸ்
x
பெரம்பூரை சேர்ந்த சுவாதிகா என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு கீர்த்திவாசன்  என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று மாதங்கள் மட்டுமே மனைவியுடன் சென்னையில் இருந்த  கீர்த்திவாசன் அதன் பின்னர் வேலை பார்க்கும்  நார்வே நாட்டுக்கு சென்று விட்டார். தன்னையும் நார்வே அழைத்து செல்லுமாறு பல முறை கூறியும் கீர்த்திவாசன், சுவாதிகாவை அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சுவாதிகா, கடந்த ஆண்டு தன் கணவரிடம் வீடியோவில் பேசியபடியே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சுவாதிகாவின் கணவர் கீர்த்திவாசனை ஆஜராகுமாறு திருவிக நகர் போலீசார் ஓராண்டுக்கும் மேலாக நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை கீர்த்திவாசனிடம் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்