ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்
பதிவு : நவம்பர் 17, 2021, 05:55 PM
ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், கிரிக்கெட் விதிமுறைகள் உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகளை ஐ.சி.சி கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே  கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்த‌தை அடுத்து, அப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி தேர்வாகியுள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கங்குலியின் அனுபவம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என ஐ.சி.சி தலைவர் கிரேக் பார்க்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

537 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

101 views

பிற செய்திகள்

ஐபிஎல் : எந்த அணி யாரை தக்கவைக்கும்..?

ஐபிஎல் தொடரில் வீரர்கள் தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்?

4 views

இது 7வது விருது... மெஸ்ஸியின் புதிய சாதனை

கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்

11 views

ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு - இன்று அறிவிப்பு

ஐபிஎல் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

7 views

ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம்... சிக்கிய ரூ.2 கோடி!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.

12 views

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா ஜோடி, தோல்வியைத் தழுவியது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.