ஐ.பி.எல். கோப்பையை வென்ற சி.எஸ்.கே... 4-வது முறையாக சாம்பியன்

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றது.
x
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றது.  

சார்ஜாவில் நடைபெற்ற14வது ஐ.பி.எல் போட்டி தொடர் இறுதிப் போட்டியில், சென்னை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த சென்னை அணி 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்து கேட்ச் முறையில் வெளியேறினார். ருத்துராஜ் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன் எடுத்து எல்.பி.டயிள்யூ முறையில் வெளியேற, மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில்,193 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 51 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேற, மவி 13 பந்துக்கு 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெர்குஷன் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு, கொல்கத்தா165 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி, 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 


Next Story

மேலும் செய்திகள்