காமன்வெல்த் போட்டி - விலகிய இந்திய ஹாக்கி அணி : மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிருப்தி

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகும் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் முடிவுக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
காமன்வெல்த் போட்டி - விலகிய இந்திய ஹாக்கி அணி : மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிருப்தி
x
அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்காது என ஹாக்கி சம்மேளனம் தெரிவித்து உள்ளது. ஆசிய ஹாக்கி தொடரை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்து உள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது மத்திய அரசுடன், ஹாக்கி சம்மேளனம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று கூறினார். 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 18 ஹாக்கி வீரர்கள் மட்டுமே இல்லை என்று கூறிய அனுராக் தாக்கூர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல், உலககோப்பை தொடர்களில் அடுத்தடுத்து விளையாடுவதுபோல், ஹாக்கி வீரர்களால் ஏன் அடுத்தடுத்து விளையாட முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்