டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3ம் நாள் ஆட்டம் - முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3ம் நாள் ஆட்டம் - முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன் சேர்ப்பு
x
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியின் டாம் லேதம் (Tom Latham) 30 ரன்களுக்கும், டிவோன் கான்வே (Devon Conway) 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்த‌து. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் (Ross Taylor) இருவரும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 116 ரன்கள் முன்னிலையில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்