இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர்... 20 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
x
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார். 

அடுத்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில், முன்னணி வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு, 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் ஷிகர் தவானும், துணை கேப்டனாக பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அணியில், பேட்ஸ்மேன்களாக பிரித்வி ஷா, படிக்கல், கெய்க்வாட், மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷானும், சஞ்சு சாம்சனும் அணியில் இடம் பிடித்து உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில், ஹர்திக் பாண்டியாவும், க்ருணல் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா உள்ளிட்டோர் பந்துவீச்சாளர்களாக அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை - இந்தியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அடுத்த மாதம் 13-ம் தேதி கொழும்புவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Next Story

மேலும் செய்திகள்