"தோனி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சில போட்டிகள் ஆகும்" - பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

தோனி தனது பழைய ஃபார்முக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் ஆகும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தோனி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சில போட்டிகள் ஆகும் - பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி
x
தோனி தனது பழைய ஃபார்முக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் ஆகும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 3 இன்னிங்ஸில் விளையாடி 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவரின் ஃபார்ம் குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது. இது குறித்து பேசி உள்ள கங்குலி, சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாடுவதால் ஃபார்முக்கு திரும்ப சில போட்டிகள் தேவைப்படும் என்றும் பேட்டிங் வரிசையில், தோனி முன்னதாகவே களமிறங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்