2வது டி.20 - பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது டி.20 - பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி
x
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் மற்றும் ஹபீஸ் இருவரும் அரை சதம் விளாசினர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர் மாலன் 54 ரன்கள் விளாசினார். கேப்டன் மோர்கன் 66 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். 

Next Story

மேலும் செய்திகள்