ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான நோவாக் ஜோகோவிச், ராஜர் பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
2020 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதன் முதல் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் - ஜெர்மனி வீரர் ஸ்டிரப்புடன் பலப்பரிட்சை நடத்தினார். ஸ்டிரப் கடும் சவால் அளித்ததால் போட்டி வெகு நேரம் நீடித்தது. இறுதியில் 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 2 , 1க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ராஜர் பெடரர் - அமெரிக்க வீரர் ஜான்சனை எதிர்கொண்டார். 11 ஏஸ் சர்வ்களை வீசிய  பெடரர் 6க்கு 3, 6க்கு 2 , 6க்கு 2 என்ற செட் கணக்கில் ஜான்சனை எளிதில் வீழ்த்தினார்.



Next Story

மேலும் செய்திகள்