ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் விளையாட்டு போட்டி : 28 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் கோவை அருகே கபடி மற்றும் எறிபந்து போட்டிகள் நடைபெற்றன.
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் விளையாட்டு போட்டி : 28 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு  ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் கோவை அருகே கபடி மற்றும் எறிபந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்வராயபுரம், பேரூர், நரசீபுரம் உள்ளிட்ட 28 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும்  மாணவ-மாணவிகள் ஆர்வமுடன்  பல அணிகளாக பங்கேற்றனர். எல்லை பாதுகாப்பு படை அதிகாரி  கமலேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளில் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. 



Next Story

மேலும் செய்திகள்