"இலக்கை துரத்துவதில் இந்தியா சிறந்த அணி" - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர்

இலக்கை துரத்துவதில் இந்தியா உலகின் சிறந்த அணியாக விளங்குவதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் தெரிவித்துள்ளார்.
இலக்கை துரத்துவதில் இந்தியா சிறந்த அணி - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர்
x
இலக்கை துரத்துவதில் இந்தியா உலகின் சிறந்த அணியாக விளங்குவதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் தெரிவித்துள்ளார். இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர், ரன்களை துரத்துவதில் சிறந்து விளங்கும் இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யும் போது புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். டி20 உலகக்கோப்பை இன்னும் 10 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து போட்டிகளையும் முழு உத்வேகத்துடன் எதிர்கொள்கிறோம் என்றும் விக்ரம் ரத்தூர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்