இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வரும் 15 ம் தேதி நடைபெறும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள், சென்னை வந்துள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
x
விமான நிலையத்தில், இரு அணி வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில், வருகிற 15 ம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி துவங்கும். அநேகமாக அடுத்த இரு நாட்களுக்கு இரு அணி வீரர்களும், போட்டி நடைபெறும் மைதானத்தில் வலைபயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 - வது ஒரு நாள் போட்டி, வருகிற 18 ம் தேதி விசாகப்பட் டினத்திலும், 3- வது இறுதி ஒரு நாள் போட்டி, 22 -ம் தேதி கட்டாக்கிலும் நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்