அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை

சர்வதேச கிரிக்கெட் அரங்கில்,400 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை
x
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டியில் சிக்ஸர் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா, புதிய மைல்கல்லை எட்டினார். ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 534 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 476 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்த சாதனை பட்டியலில், இந்திய வீரர், ரோகித் சர்மா 400 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடம் வகிக்கிறார். டெஸ்டில் 52 சிக்ஸர்கள், ஒரு நாள் போட்டியில் 232 சிக்ஸர்கள், டி -20  போட்டியில் 116 சிக்ஸர்கள் என மொத்தமாக 400 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் ரோகித். மேலும் இந்த ஆண்டு அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித் 67 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்