ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கவுகாத்தியை வீழ்த்தி கொல்கத்தா அபாரம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கவுகாத்தியை வீழ்த்தி கொல்கத்தா அபாரம்
x
ஆசாமில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - கவுகாத்தி அணிகள் மோதின. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 35வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா தனி ஆளாக பந்தை கடத்தி சென்று கோல் கீப்பரை ஏமாற்று கோல் அடித்தார்.இரண்டாம் பாதியில் கவுகாத்தி சிறப்பாக ஆடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கூடுதல் நேரத்தில் ராய் கிருஷ்ணா மீண்டும் கோல் அடித்தால்  கொல்கத்தா அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்