மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி-20 போட்டி : டக் வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி-20 போட்டி : டக் வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வெற்றி
x
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரோ​ஹித் சர்மா அதிரடியாக விளையாடி 67 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் லீவிஸ், நரைன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, போவெல் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 16வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து டக் வொர்த் லூயிஸ் விதிப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 

Next Story

மேலும் செய்திகள்