9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - ஆயத்த பணியில் அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.
x
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.  

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தபடவில்லை.

இந்நிலையில், செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதனால் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கட்சிகளும்
தமது பணிகளை தொடங்கியுள்ளன.

கடந்த ஜூன் மாதமே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய ஆளுங்கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்ய உத்தரவிட்டது.

அதிமுகவில் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.


வைகைச்செல்வன், அதிமுக
 
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடருமென தெரிவித்துள்ள பாஜக, தேர்தலுக்காக 17 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி, கே.டி. ராகவன் உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.பி. துரைசாமி, பாஜக
 
உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
வழக்கம்போல அதிரடி காட்டியுள்ளார்.

இதேபோல் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்காக ஆலோசனையை தொடங்கியிருப்பதாக
அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சிகளின் செயல்பாடுகளால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்