மூன்று முறை முதலமைச்சர்... ஓ.பி.எஸ். அரசியல் பயணம்...

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலில் ஆரம்பம் முதல் தற்போது வரையிலான அவரது பயணத்தை விரிவாக பார்ப்போம்....
x
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலில் ஆரம்பம் முதல் தற்போது வரையிலான அவரது பயணத்தை விரிவாக பார்ப்போம்....

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்..

அரசியல் ஆர்வத்தில் 1969ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த ஓபிஎஸ். 

எம்.ஜி.ஆர் அதிமுகவை நிறுவிய போது, 1973ல் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

1987ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்ட போது ஜானகி அணியில் பெரியகுளம் நகர செயலாளரான ஓபிஎஸ்.

1991ஆம் ஆண்டு  பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பதவி பெற்றார்.

2001ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அவர்,

ஜெயலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார்.

2001ல் டான்சி வழக்கில் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தபோது, முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார் ஓபிஎஸ்...

2002 மார்ச் ஒன்றாம் தேதி வரை முதலமைச்சராக பதவி வகித்த ஓபிஎஸ், ஜெயலலிதா விடுதலையான பிறகு பதவியை ராஜினாமா செய்து பொதுப்பணித்துறை அமைச்சரானார். 

2006ஆம் ஆண்டு அதிமுக தோல்வியை தழுவியதால், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

2014ஆம் ஆண்டு சொத்து வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது, மீண்டும் ஓபிஎஸிடமே முதலமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டது.

2015 மே வரை முதலமைச்சராக பதவி வகித்த ஓபிஎஸ், ஜெயலலிதா விடுதலையான பின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

2016ல் ஜெயலலிதா இறந்த பிறகு மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஓபிஎஸ், அடுத்த இரண்டரை மாதங்களில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வானதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து கட்சியில் பிளவு ஏற்பட பல கட்ட பேச்சுவார்த்தை பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த ஓ.பி.எஸ்., ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை பெற்றார்.

சட்டமன்ற தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் பெயரும் அடிபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தானே அறிவிப்பு வெளியிட்டார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் ஓபிஎஸ் பெயர் அடிபட, நீண்ட இழுபறிக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து, ஓபிஎஸ்ஸே அறிவிப்பை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்