மே 28 ஜி.எஸ்.டி கவுன்சில் - உறுப்பினராகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் புதிய அரசு சார்பில் அமைச்சர் ஒருவரை  பிரதிநிதியாக நியமிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விரைவில் கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், டி.ஜெயக்குமார் ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்