"நாட்டில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி செலவில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா தொற்றை தொடர்ந்து சுகாதார கட்டமைப்புகளை 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு மேம்படுத்தி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி செலவில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
உலக வங்கி வளர்ச்சி குழுவின் 102-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. கொரோனா நெருக்கடி மீட்பு நடவடிக்கையில் உலக வங்கி குழுமத்தின் பங்கு, கொரோனா பாதிப்பை அளவிடுவது, உயிர்களை காப்பாற்றுவது, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவது, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் குறிப்புகளை புதுப்பிப்பது, கடன் சேவை  நிறுத்தி வைப்பு முயற்சியை அமல்படுத்துவது மற்றும் நீட்டிப்பது  குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  இதில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல ஆண்டுகள் கடுமையாக போராடி, ஏழ்மையின் அளவை குறைத்ததை இழக்கும் அபாயம் தற்போது அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், சமூக மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்கவும், எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் உள்ள தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும், தெற்கு ஆசிய பகுதியில் முக்கிய பங்காற்றவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றை எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கை முக்கியம் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், உலக வங்கி இதற்காக 45 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்ய உறுதி பூண்டு உள்ளதையும் வரவேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்