அவையின் அலுவல் நேரம் அதிகரிக்கப்பட்டது முதல் முறையா? - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கேள்வி

கடந்த 20 ஆம் தேதி தான் முதல் முறையாக அவை நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளதா என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவையின் அலுவல் நேரம் அதிகரிக்கப்பட்டது முதல் முறையா? - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கேள்வி
x
கடந்த 20 ஆம் தேதி தான் முதல் முறையாக அவை நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளதா என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், தான் கோரியதை தொடர்ந்து துணை சபாநாயகர் அவை அலுவல் நேரத்தை அதிகரிப்பதாக அறிவித்த உடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் குவிந்ததாக அமைச்சர் தெரிவித்தார். அவைக் காவலலர் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது தான் உறுப்பினர்கள் அவையில் நடந்து கொள்ளும் விதமா என்றும் கேள்வி எழுப்பினார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலையில், அவை நடவடிக்கையில் இருந்து அவர்களை தவிர்க்க அரசு முயலாது எனவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்