அறிவியல் பூரவமான ஆயுர்வேதம் வளராமல் போனதற்கு காரணம் யார்? - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கேள்வி

குஜராத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைக்க வழிவகை செய்யும் மசோதாவின் மீது மாநிலங்களவையில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அறிவியல் பூர்வமான ஆயுர்வேதத்தை, அதனை காலம் காலமாக பயன்படுத்துபவர்கள் மற்றவர்கள் கற்க அனுமதிக்காததே, அது வளர முடியாமல் போனதற்கு காரணம் என தெரிவித்தார்.
x
குஜராத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைக்க வழிவகை செய்யும் மசோதாவின் மீது மாநிலங்களவையில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அறிவியல் பூர்வமான ஆயுர்வேதத்தை, அதனை காலம் காலமாக பயன்படுத்துபவர்கள் மற்றவர்கள் கற்க அனுமதிக்காததே, அது வளர முடியாமல் போனதற்கு காரணம் என தெரிவித்தார். ஆயுர்வேத முறை  பிரபலமாக இருக்கும் கேரளா,   இயற்கை வளங்கள் மற்றும் மூலிகைகள் உள்ள தமிழகத்தின் குற்றாலம் மற்றும் கொல்லிமலை போன்ற இடங்களில் அரிய வகை மூலிகைகள் இருப்பதாக குறிப்பிட்ட தம்பிதுரை, குஜராத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பல அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த நிறுவனத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும்,  கோவை, குற்றாலம் அல்லது கொல்லி மலையில் புதிதாக ஒரு ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தை தொடங்க வேண்டும் எனவும் மத்திய அரசு  கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்