புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ்உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை

புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாடு நாளை நடைபெறுகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ்உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை
x
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாடு நாளை நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக் கழக மானியக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முழுமையான, பலதரப்பட்ட மற்றும் எதிர்காலக் கல்வி, தர ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சிறந்து விளங்க, தொழில் நுட்பத்தின் சமமான பயன்பாடு போன்ற கல்வியின் குறிப்பிடத்தக்க அம்சங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமர்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெற உள்ளது. இதில் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரபல கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். 
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் கல்லூரி அதிபர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் பங்கேற்பார்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்