ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை
x
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  கொரோனோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி எம்.பிக்களுடன்  சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, எம்.பி.,க்கள் பலரும்  ராகுல் காந்தி  மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சோனியாகாந்தி இடைக்கால தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தியா அல்லது பிரியங்கா காந்தியா என்பது குறித்து பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்