"கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்" என்ற திட்டத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் "கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்" என்ற திட்டத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தின் மூலம் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 116 மாவட்டங்களில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 125 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 25 வேறுபட்ட வகையான பணிகள் குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் பிகார் திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக மீண்டும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் விரும்பாத நிலையில், இந்த திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டின் கிராமப்புற பகுதிகளில் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் போது, லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த பிரதமர் மோடி, ராணுவ படையினருக்கு  தேசம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்