அந்தமானில் கருணாநிதி சிலை திறப்பு - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை அந்தமானில் , திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்தமானில் கருணாநிதி சிலை திறப்பு - மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்
x
மறைந்த முதலமைச்சர்  கருணாநிதியின்  உருவச் சிலையை அந்தமானில் , திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர் , இனி அந்தமானிலும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி கூட்டணி  இருக்கும் என்றார்.இந்தியாவில்  மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர் , அதனால் தான் எந்த  மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் , பதவியேற்பு விழாக்களுக்கு  திமுக தலைவரான தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவித்தார்  தமிழர்களுக்காக, தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது.  என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்