மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் : "தேசத்தை பாதுகாப்போம்" என்ற பெயரில் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில்,மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் : தேசத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை சட்டதிருத்த மசோதா காஷ்மீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை பாலியல் குற்றங்களை கண்டித்து "தேசத்தை பாதுகாப்போம் " என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் பிரமாண்டமான கண்டன பேரணி நடைபெற்றது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில், சோனியாகாந்தி, ராகுல் காந்தி,  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம்  உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  Next Story

மேலும் செய்திகள்