"மனிதர்களே கழிவுகளை அகற்றுவது வெட்கக் கேடானது" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
மனிதர்களே கழிவுகளை அகற்றுவது வெட்கக் கேடானது - தி.மு.க. எம்.பி. கனிமொழி
x
ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மூன்றாம் நபர்களிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் அந்த கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் மக்களவையில் பேசிய  தி.மு.க. எம்.பி., கனிமொழி தெரிவித்தார். இந்த நிலை தொடர்வது வெட்கக் கேடானது என தெரிவித்தார். இதற்கு பொறுப்பேற்பதுடன், ரயில்வே துறை மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல், பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்,  ரயில்களில் பயோ டாய்லெட் உருவாக்கப்பட்டு, மனித கழிவுகள் ரயில்வே பாதைகளில் விழாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இருந்ததற்கு  நாங்கள் என்ன செய்ய முடியும் என மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்