குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்
குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
x
தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய அவர் குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல சுமார் 1 புள்ளி 75 கோடி மக்கள் பலன் அடைவார்கள்  என்றும் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சமாஜ்வாடி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து பேசிய அமித்ஷா, குடியுரிமை மசோதாவில் உள்ள அனைத்து அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கத் தயார் என்றும் எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டும், வெளிநடப்பு செய்யக் கூடாது எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்