"ஸ்ரீ இராமனுஜர் பிறந்த இடம் ஸ்ரீபெரும்புதூர்" - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
பதிவு : டிசம்பர் 04, 2019, 02:26 PM
சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்தார்.
சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில், தி.மு.க.  உறுப்பினர் டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்தார். இந்த புதிய ரயில் பாதை திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக டி. ஆர். பாலு குற்றம் சாட்டினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மிக முக்கியமான பகுதி என்றும் அங்கு ஏராளமான மதக் கோயில்கள் இருக்கின்றன என்றும், ஸ்ரீ ராமானுஜர் பிறந்த இடம் என்றும் டி. ஆர். பாலு குறிப்பிட்டார். அங்கு ஏராளமான  பாதுகாப்பு தொழிற் சாலைகள் மற்றும் ராஜீவ் காந்தி நினைவகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், கோயில்கள் பற்றிய உறுப்பினரின் பேச்சு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 23 வயது பெண் நேற்று நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் உயிரோடு எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

18 views

பிற செய்திகள்

சித்தராமையாவை நலம் விசாரித்த எடியூரப்பா

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

33 views

குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : அசாமில் தொடரும் போராட்டம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 4 வது நாளாக பல்வேறு இடங்களில் குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

19 views

நாடாளுமன்ற தாக்குதல் 18-வது நினைவு தினம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்அஞ்சலி

நாடாளுமன்ற தாக்குதல் 18 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

17 views

ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் கொள்ளை - ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேர் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் வருமானவரித் துறை அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

96 views

"வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு" - சத்சங்கம் நிகழ்ச்சியில் கலகலப்பூட்டிய நித்தி

வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு என்பதால் ஞானப்போரில் உடனே இறங்குங்கள் என சத்ச​ங்கம் நிகழ்ச்சியில் நித்தி பேசியிருப்பது வேற லெவல் பிரசங்கம்...

314 views

"மூட நம்பிக்கையால் பாவத்தை சேர்க்கும் பக்தர்கள்" - தேவஸ்தான ஆகம ஆலோசகர் ரமண தீட்சிதர் பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்கொலை செய்து கொண்டால் பாவமே சேரும் என தேவஸ்தான ஆகம ரமண தீட்சிதர் தெரிவித்துள்ள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.