பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்

சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல, 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்
x
எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை என்று கூறினார். சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும்  அரசு, அக்கறை கொண்டுள்ளதாக கூறினார். எஸ்பிஜி பாதுகாப்பை தனிமனிதர்கள் சமூக அந்தஸ்தாக பார்க்கக் கூடாது என்ற அமைச்சர், எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் முடிவு என்பது, அவருக்கு இருக்கும் மிரட்டல்களை, அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து வழங்கப்படுவதாக கூறினார். பிரியங்கா கார்ந்தி வீட்டில் கார் புகுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய அமித்ஷா, இது தொடர்பாக 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு உயர்ந்த அந்தஸ்து பெற்ற இசட் பிளஸ் பாதுகாப்பு, ஆம்புலன்ஸுடன் வழங்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்