"பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை" - சோனியாகாந்தி குற்றச்சாட்டு

லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை - சோனியாகாந்தி குற்றச்சாட்டு
x
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய  அவர், மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது என்று தெரிவித்தார். மேலும், பாஜக ஆட்சியில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்க பேச வேண்டும் எனவும் ஜம்மு- காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக அரசு,  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதிக்கிறது என்றும் விமர்சனம் செய்தார். லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருவதாகவும்
மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்