மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிராவில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரியும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, அசோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, புதிதாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இடைக்கால சபாநாயகர் உடனடியாக நியமிக்கப்பட்டு, புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவும் உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பை இடைக்கால சபாநாயகர் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.  பட்னாவிஸ் அரசு தப்புமா என்பது நாளை மாலைக்குள் தெரிந்து விடும்.


Next Story

மேலும் செய்திகள்