"ஆர்.சி.இ.பி. தொடர்பான காங்கிரஸ் நிலைப்பாடு சரிதான்" - ப.சிதம்பரம் ட்வீட்

கடந்த 2012 ஆம் ஆண்டு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில், இணைவது தொடர்பாக முயற்சி எடுப்பது என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவு சரியானது தான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆர்.சி.இ.பி. தொடர்பான காங்கிரஸ் நிலைப்பாடு சரிதான் - ப.சிதம்பரம் ட்வீட்
x
கடந்த 2012 ஆம் ஆண்டு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில், இணைவது தொடர்பாக முயற்சி எடுப்பது என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவு சரியானது தான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் சார்பில், அவரது குடும்பத்தினர் இட்ட பதிவில், தற்போது அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என அரசை, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதும் சரி தான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2012 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் பொருளாதார நிலையை ஒப்பிடும் போது, தற்போது அது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அந்த நிலைக்கு நாட்டை அழைத்து சென்றது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிர்வாகத் திறனற்ற நிலையே எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்