"உள்ளாட்சி தேர்தலில் 95 % வெற்றி உறுதி" - ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் நம்பிக்கை

உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவின் வெற்றி 95 சதவீதம் உறுதி என அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் 95 % வெற்றி உறுதி - ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் நம்பிக்கை
x
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் வெற்றியை போல, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை ஈட்ட, கடினமாக உழைக்குமாறு, கேட்டுக்கொண்டார்.  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்களை பெற, குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  உள்ளாட்சி தேர்தலில், சிறந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்