மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்

மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அயோத்தி தீர்ப்பை ஏற்றுக்கொள்வது என ஆர்எஸ்எஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்
x
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி வழக்கில் வரும்17-ம் தேதிக்கு முன்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதை முன்னிட்டு மத்திய சிறுபான்மையின நல விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் ஆர்எஸ்எஸ் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது  தீர்ப்பு எப்படி  வந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாத வகையில் தீர்ப்பை ஏற்பது என அனைத்து தலைவர்களாலும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கிருஷ்ணா கோபால், ராம்லால், முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன், ஜமாஅத் உலமா - இ- ஹிந்த் தலைமை செயலாளர் மஹ்மூது மதானி, திரைப்பட இயக்குனர், முசாபர் அலி, அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் கமல் பரூக்கி, முன்னாள் எம்பி ஷாகித் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முக்தர் அப்பாஸ் நக்வி ஆர்எஸ்எஸ் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் இடையே இப்படி ஒரு கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்று தெரிவித்தார். தீர்ப்பு எப்படி வந்தாலும் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் தீர்ப்பை ஏற்பது என்று ஒரு மனதாக அனைத்து தலைவர்களாலும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதேப்போல மத கலவரத்தை தூண்டும் வகையில், பரவும் சமூக வலைதள பகிர்வுகளை கண்காணிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது

Next Story

மேலும் செய்திகள்