"மோடி அரசின் முன்னுரிமை பட்டியலில் கடைசி இடத்தில் பொருளாதாரம்" - ப.சிதம்பரம் ட்விட்டர் பகுதியில் பதிவு

நாட்டில் வளர்ந்த மற்றும் வீழ்ந்த சம்பவங்கள் குறித்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பிரதமர் நரேந்திர மோடி சொன்ன பட்டியல் முழுமையானதாக இல்லை என திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் முன்னுரிமை பட்டியலில் கடைசி இடத்தில் பொருளாதாரம் - ப.சிதம்பரம் ட்விட்டர் பகுதியில் பதிவு
x
அவரது சார்பாக குடும்பத்தினர் வெளியிட்ட பதிவில் முதலீடு, முக்கிய துறைகளின் வளர்ச்சி, நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் வளர்ச்சி, வாடிக்கையாளர் தேவை மற்றும் தொழில் செய்வதற்கான நம்பிக்கை வீழ்ந்துள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வேலையின்மை அளவு 8.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதையும், கடந்த 3 ஆண்டுகளில் அளித்த கடன்கள் வராக் கடன்களாக, மோசமான கடனாக மாறியதையும் பட்டியலிட்டிருக்க வேண்டும் என அதில் சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று தோன்றுகிறது எனவும், "நாணாமை நாடாமை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்" என்ற திருக்குறளையும் பதிவிட்டு, பழி பாவங்களுக்கு வெட்கப் படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள் என அந்த பதிவில் விளக்கமும் இடம் பெற்றுள்ளது. ஜம்மு, காஷ்மீர் நடவடிக்கைக்கு பின்னர் மோடி அரசின் முன்னுரிமை பட்டியலில், நாட்டின் பொருளாதாரம் கடைசி  இடத்தில் உள்ளதை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் என்ற ஒரு விசயத்தில் மட்டும், பா.ஜ.க. கடைபிடிக்கும்  MUSCULAR தேசியவாதம் எடுபடவில்லை என்றும், மாறாக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ,தீங்கு விளைவிக்கும் வகையில் அது அமைந்து விட்டதாகவும் சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்