பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த விவகாரம் : சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிர்பந்தப்படுத்தப்பட்ட போது என்ன செய்தீர்கள் என சோனியா காந்திக்கு பியூஸ் கோயல் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த விவகாரம் : சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி
x
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது   நிர்பந்தப்படுத்தப்பட்ட போது என்ன செய்தீர்கள் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேள்வி எழுப்பி உள்ளார். 10 ஆசியான் நாடுகள் மற்றும் 6 நாடுகளுடன், பிராந்திய விரிவான பொருளாதார ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 2004ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகரித்த போது சோனியா காந்தி என்ன செய்தார்? என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கேள்வி எழுப்பி உள்ளார். 2010ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா உடன் இது தொடர்பாக பேச்சு நடத்த நிர்பந்தப்படுத்தப்பட்டதையும், ஆசியான், தென்கொரியா, மலேசியா மற்றும் ஜப்பானுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான போது சோனியா காந்தி என்ன செய்தார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசியான் நாடுகளுக்கு 74 சதவீத சந்தையை இந்தியா திறந்து விட்ட போது, இந்தோனேஷியா 50 சதவீதம் அளவுக்கு தான் தனது சந்தையை திறந்த  போது, ஆட்சியில் இருந்தது சோனியா காந்தி என்று அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார். வர்த்தக பற்றாக்குறையை  கட்டுப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்