2019-2020 ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் : கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

2019-2020 ஆண்டுக்கான குடிமராமத்து பணிக்கு ஆயிரத்து 829 ஏரிகள் தேர்வு செய்து, 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2019-2020 ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் : கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
x
பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க உறுப்பினர் கே.என்.நேரு, கிராம தலைவர்கள், விவசாயிகள் முன்னிலையில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், நிலத்தடி நீரை பாதுகாக்க தி.மு.க-வைவிட அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். நீர் மேலாண்மைக்காக தனி அமைப்பு உருவாக்கி, அதன் தலைவராக மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 85 ஆண்டுகளுக்கு பிறகு 100 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டிருப்பதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்