"தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம்" - மோடி

வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம் - மோடி
x
வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். வெற்றியை பாஜக தொண்டர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார். முதலில் தாம் ஒரு பாஜக தொண்டன் எனவும், அதன் பிறகு தான் இந்த நாட்டின் பிரதமர் என்றும் மோடி கூறினார். வாரணாசி மக்கள் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த மோடி, வாரணாசியில் பெண்கள் நடத்திய பேரணி, நாடு முழுவதும் வேகமாக பரவியதாகவும், ஒவ்வாரு வீட்டிலும் ஒரு மோடி, இந்த தேர்தலுக்காக பணியாற்றி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். வாரணாசியில், தமக்கு எதிராக போட்டியிட்டவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக, தனது உரையில் மோடி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்