திடீரென மாயமான திமுக பிரமுகர் : திரும்பி வந்து கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்
பதிவு : மே 14, 2019, 05:48 PM
சேலத்தில் மாயமான திமுக பிரமுகர் வீடு திரும்பிய நிலையில், தன்னை மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் கடத்திசென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் அருகே சிவதாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். பனங்காடு திமுக கிளை செயலாளராக உள்ள இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது, ஏலச்சீட்டு நடத்துவது என பல தொழில்கள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை நாகராஜ் திடீரென மாயமானதால், அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச்சென்றதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் தங்கதுரை தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த‌து. இந்நிலையில், இன்று அதிகாலை, நாகராஜ், அவரது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த சூரமங்கலம் ஆய்வாளர் செந்தில், அவரது வீட்டிற்கு சென்று விசாரித்த போது, தன்னை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்திசென்றதாக நாகராஜ், திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். காரில் சித்தூருக்கு கடத்தி சென்ற அந்த மர்ம கும்பல், அங்கு பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் இல்லை என்பது தெரிந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டி அனுப்பி வைத்த‌தாகவும் நாகராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த‌தாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் மீது புகார் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நாகராஜ், உண்மையாகவே கடத்தப்பட்டாரா, அல்லது அவரே கடத்தல் நாடகம் ஆடுகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். 

பிற செய்திகள்

அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் : சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாத நிலை - அமைச்சர் அன்பழகன்

இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகள் பாதிக்காது என உறுதி அளிக்காததால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்து அங்கீகாரத்தை ஏற்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

23 views

அமைச்சர் வேலுமணி மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு - தி.மு.க ஒன்றிய செயலாளர் துரை கைது

அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

621 views

நாளை கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் - ஆடம்பர நிகழ்வுகள் கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வரும் நிலையில், சமூக ஒழுங்கினைக் கடைபிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழை போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

148 views

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்க்கால​ம் - தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அறைகூவல்

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்க்காலத்தை படைக்க, தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

73 views

திமுகவில் பட்டியலின மக்கள் இல்லை" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து

பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

33 views

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.